Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள உப்பிடமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன், சக்திவேல் ஆகிய இருவரும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு கோபாலகிருஷ்ணனை தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு பேரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேல் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |