Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர்.

சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), நந்தகோபால்(47) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரபல ரவுடியான மணிகண்டன் என்பவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது தெரியவந்தது.

இதனை தட்டிக் கேட்ட போலீஸ் ஏட்டுகளை மணிகண்டன் உடைந்த பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ரவுடி மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |