முதியவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள எருமைகரிச்சி கொட்டகை கிராமத்தில் பாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கடலாடி காவல்துறையினர் முதியவரை தாக்கிய முருகன் மற்றும் முகேஷ் கண்ணன் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.