தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடங்கியதால் புதிய சமூக ஊடக வெளியை உருவாக்க போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டதால் தான் சொந்தமாக சமுக ஊடக வெளியை உருவாக்க போவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.