Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் புதிய கொள்கை… என்ன தெரியுமா…? எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர்  நிறுவனத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் சர்வதேச  அளவில் டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில்  பாதி பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் லாப நோக்கத்தில் செயல்பட வைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு ஒரு வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால் மீதமுள்ள ஊழியர்களுக்கு வேலை சுமை அதிகரித்தது. இதற்கிடையே கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் என்னுடன் இருக்கலாம் மீதம் உள்ளவர்கள் மூன்று மாத சம்பளத்துடன் விலகிக் கொள்ளலாம் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.  இதுகுறித்து முடிவெடுப்பதற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை கால அவகாசம் விதித்துள்ளார். அந்த கால அவகாசம் முடிந்ததையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பதவி  விலக முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து  எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் நேரடியாகவும், மற்ற சிலர் காணொலி  காட்சி வழியாகவும் பங்கேற்றுள்ளனர். அதில் எலான் மஸ்க் பேசியபோது, வெற்றி பெறுவது எப்படி என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புவர்கள் மட்டும் என்னுடன் இருங்கள் என கூறியுள்ளார். மேலும் 21ஆம் தேதி வரை டுவிட்டர்  நிறுவனம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய கொள்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது சமூக ஊடக நிறுவனத்தில் வெறுப்பு  பேச்சு மற்றும் எதிர்மறையான டுவீட்டுக்களை கட்டுப்படுத்த புதிய உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கையை நேற்று அறிவித்துள்ளார்.

  • வெறுக்கத்தக்க / எதிர்மறை டுவீட்டுக்கள் அதிகபட்சமாக நீக்கம் செய்யப்படும் & பண மதிப்பு நீக்கம் செய்யப்படும். வலைதளத்தில் இருப்பது போலவே ஒரு பயண சரியான முக்கிய வார்த்தைகளுடன் தேடினால் இந்த டுவீட்டுக்கள் தெரியும். தனிப்பட்ட டுவீட்டுக்கு மட்டுமே இது பொருந்தும்.
  • மேலும் பண மதிப்பு நீக்க கொள்கையில் அர்த்தம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட டுவீட்டுகளில் டுவிட்டர் விளம்பரம் மூலமாக அல்லது வேறு எந்த விதமான வருமானமும் ஈட்டாது.

Categories

Tech |