Categories
சினிமா தமிழ் சினிமா

ட்ரோல் செய்து வந்த ரசிகர்கள்…. “ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்”….!!!!!

இரண்டு மாதங்களாக ட்ரோல் செய்திருந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெல்சன்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்துடன் பீஸ்ட் திரைப்படத்தை ஒப்பீட்டு நெல்சனை இணையத்தில் கலாய்த்து பல மீம்களை போட்டு கலாய்த்தனர்.

இதனால் சமூக வலைதள பக்கம் வராமல் இருந்த நெல்சன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார்கள். மேலும் தலைவர் 169 திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கின்றனர். இதன்மூலம் நெல்சன் ட்ரோல்களுக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |