சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது.
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றை படம் எடுத்ததாகவும் அதன் பிறகு உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற முக்கியமான கட்டிடங்களை படம் எடுத்ததாகவும் அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்தார். அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்கவிட்டால் குற்றத்திற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.