நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வரிசையில் நடிகர் அஜித் அனைவராலும் தல என்று அழைக்கப்படுவார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் வருகின்ற மே 1 ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இப்போதே #Thala50FestIn100D என்ற ஹேஸ்டேக் உடன் ட்விட்டரை அதகளப்படுத்த துவங்கிவிட்டனர். அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.