Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு ..!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர். 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியுள்ளது. அந்த சொகுசு கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 624 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரானா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

 

Categories

Tech |