Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டேமியன் பவுண்டேஷன் சார்பில் …. மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள‌ சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்திரசேகர், ஞான சம்பத், ஊராட்சி செயலாளர் மனோகர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சால்வை  அணிவித்து வரவேற்றார். மேலும் குறைபாடுகளை தடுப்பது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேராமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |