ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி,ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை எதிர்கொண்டார்.
இதனையடுத்து,பெர்க்ஸ்ட்ரோம் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால்,முதல் ரவுண்டில் 11-5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தார்.அதன்பின்னர்,ஆட்டத்தை கைப்பற்ற முயற்சித்தார். இந்நிலையில்,சுதிர்தா 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,தற்போது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால்,பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுதிர்தா முகர்ஜி தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார், மேலும் 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார். தோஹாவில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.