Categories
தேசிய செய்திகள்

டேட்டிங் ஆப்பை நம்பி “பாடி மசாஜ்”…. இளைஞருக்கு அப்பார்ட்மெண்டில் நடந்த அவலம்…!!

ஆன்லைன் ஆப்பை நம்பி பாடி மசாஜ் செய்ய சென்ற இந்திய இளைஞர் 3 பெண்கள் பணத்தை பறித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் வசித்து வருகிறார். அவர் டேட்டிங் ஆப்பில் அழகிய பெண்கள் “பாடி மசாஜ்” செய்வதாக இருந்த ஒரு விளம்பரத்தை நம்பி அதிலுள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மறுமுனையில் பேசிய பெண் அவரை Al Refaa என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படியே அவர் அங்கு சென்று கதவை தட்டியுள்ளார். அங்கே ஆப்பிரிக்காவை சேர்ந்த 4 பெண்கள் அவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவரது கிரெடிட் கார்டில் இருந்து சுமார் ரூ. 5,92,586 அவர்கள் தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி கொண்டனர். மேலும் அவரை ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து மிரட்டி சுமார் ரூ.49,38,219 பணத்தை பல்வேறு வங்கிக்கு மாற்றியுள்ளனர்.கடைசியாக அவரிடம் இருந்த ஐபோனையும் பறித்துக் கொண்டு அவரை விரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இளைஞர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் நைஜீரியாவை சேர்ந்த 3 பெண்களை ஷார்ஜாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர். ஆன்லைன் ஆப்பை நம்பி “பாடி மசாஜ்” செய்ய சென்ற இந்திய இளைஞர் துபாயில் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |