உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடருக்கான புள்ளி பட்டியல் விகிதங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவது வைத்து கணக்கிடப்படுகிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது வழக்கமாகவுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் எந்த அணிகள் பங்கேற்கும் என்பது குறித்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணித்துக் கூறியுள்ளார். அதாவது இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 உள்நாட்டு டெஸ்ட்களிலும் ஒரு போட்டியை கூட டிரா செய்யாமல் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இலங்கை, வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அண்மையில் தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்றது. இந்த பிட்சும், இங்கிலாந்த் பிட்சும் ஒன்று என்பதால் அங்கு நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது என்பது மிகவும் பிரச்சினையாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.