நடிகர் விஜய் டெல்லி விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.
Video • #ThalapathyVijay Off to Delhi from Chennai ✈️ #Beast @actorvijay! pic.twitter.com/Z1NWulX6p4
— #GOAT Movie (@GOATMovOff) September 20, 2021
மேலும் இன்று காலை விஜய் விமானத்தில் டெல்லிக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.