Categories
மாநில செய்திகள்

“டெல்லி விசிட்” கிரீன் சிக்னல் காட்டிய பாஜக மேலிடம்…. செம குஷியில் எடப்பாடி…. அதிமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும்  நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் அறிவித்தது.

இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு கூட்டம் செல்லும் என கூறினார்கள். இதேபோன்று அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதால், எடப்பாடியின் கையே இதுவரை கட்சியில் ஓங்கி இருக்கிறது. அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சி நிலவும் உட்கட்சி பிரச்சனை காரணமாக பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இன்று மாலை டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி மறுநாள் காலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்கு பாஜக மேலிடம் அனுமதி கொடுத்ததால் அவரின் ஆதவாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கட்சியின் சின்னம் தொடர்பாக ஒரு மனு கொடுக்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |