டெல்லி அரசு காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது.
டெல்லியில் புதிதாக பதிவாகும் வாகனங்களில் மூன்றில் இரு பங்கு இருசக்கர வாகனமாக உள்ளது. காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக அம்மாநிலம் மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. டெல்லி அரசிடம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் துறையின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களை தவணை முறையில் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக டெல்லி அரசு சி.இ.எஸ்.எல். நிறுவனத்துடன் கை கோர்த்து உள்ளனர். சி.இ.எஸ்.எல் நிறுவனம் மின்சார சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் அமைக்க உள்ளது. இதுபோல், மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 வரை ஊக்கத் தொகை வழங்கும் மற்றொரு திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.