Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டெல்லி போலீசை பிடித்த…. உள்ளூர் காவல்துறையினர்…. தகவல் தெரிவிக்காததால் ஏற்பட்ட குழப்பம்….!!

சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் மணிகண்டன் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏமன் நாட்டு காவல்துறையினர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் வைத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அறந்தாங்கியை சேர்ந்த ரசாக் என்பவரிடம் 90,000 ரூபாய் கொடுத்து போலி விசா எடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் உடனடியாக அறந்தாங்கிக்கு சென்று ராசக்கை கைது செய்து விசாரித்துள்ளனர். இதனைதொடர்ந்து  இந்த போலி விசா எடுத்ததில் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்த நிலையில் டெல்லி போலீஸ் 3 பேர் ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றுள்ளனர்.

அப்போது கீழக்கரை உணவகத்தில் காவல்துறையினர் பக்ருதீன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாதாரண உடை அணிந்து இருந்ததால், போலீஸ் என அறியாமல் உணகவத்தில் இருந்த ஒரு நபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழக்கரை காவல்துறையினர் அந்த 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

மேலும் அவர்கள் போலீஸ் அடையாள அட்டை காண்பித்த பின்னரே காவல்துறையினர் என தெரியவந்துள்ளது. இதற்குப் பின்னர் போலீசார் பக்ருதீன் வீட்டை கண்டுபிடித்து வீட்டு வாசலில் நோட்டீசை ஓட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய காவல்துறையினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் இத்தகைய குழப்பம் ஏற்படுவதாக கீழக்கரை காவல்துறையினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |