ஹர்ஷித் கோயல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் அடிப்படை உரிமைகளுக்கும், அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. ஆகவே சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பொதுநல மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.