Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 48 மணி நேரத்தில்…. 3 துப்பாக்கி சூடு சம்பவம்… பரபரப்பு..!!

டெல்லியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது இதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியின் ஸ்ரீராம் காலணிக்கு அருகில் காசி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் சோஹ்ராப் அன்சாரி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனிப்பட்ட பகையின் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அன்சாரி அவரது கடையிலேயே பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்று டெல்லியில் பிரஹம்புரி சாலையில், உள்ள பால் விற்பனையகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இதில் 42 வயதான மனோஜ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

2 துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட நபர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்த இந்த மூன்று நாட்களில் மற்றும் இரண்டு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாகவும் இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |