Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரலாறு காணாத மழை… வெள்ளக்காடான மாறிய சாலைகள்…!!!

டெல்லியில் வரலாறு காணாத மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக டெல்லியின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.

மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு நாளில் மட்டும் 112.1 மில்லி மீட்டர் மழை பெய்து இருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |