Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்த மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆபத்து அச்சுறுத்தி வருகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகன பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காற்றில் மாசியின் அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஐந்து மாத காலத்திற்கு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தால் அங்குள்ள சாலைகளில் வாகன பெருக்கம் முற்றிலுமாக குறைந்தது. இதனால் மாசு ஏற்படுவது குறைந்து தெளிவான சூழல் நிலவியது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் வாகனப் பெருக்கம் அதிகரித்து இருப்பதால் மாசு அளவும் அதிகரித்துள்ளது. ஊரடங்கின் போது டெல்லியிலிருந்து தெளிவாக தெரிந்த இமயமலைத் தொடரை தற்போது காண முடியவில்லை என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்த நிலைமைக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |