டெல்லியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21) என்ற தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அழகு நிலைய வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் பெண்ணின் உறவினர்கள் டெல்லி வாழ் தமிழர்கள் ஒன்றாகக் கூடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்..
இதற்கிடையே அந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.. பிரேத பரிசோதனையின் அறிக்கைக்குப் பின் தான் முழுமையான விவரம் தெரியவரும்.. அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், லட்சுமி இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.