Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி போலீசாருக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில், குற்றவாளி தீபக் என்ற டைகர் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |