Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரம்…!!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தற்போது கடுமை என்னும் பிரிவில் இருக்கிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது கடுமை என்ற பிரிவில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் பயிர்களை தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசை குறைப்பதற்காக வாகனங்கள் இயக்குவதை குறைப்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காற்று மாசுபாடு இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமை பிரிவில் இருக்கிறது. மேலும் காற்றின் தரம் 431 புள்ளிகளாக இருக்கிறது.இதனை அடுத்து டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |