Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக திமுக ஏன் அறிவிக்கவில்லை? அமைச்சர் தங்கமணி கேள்வி!

திமுக ஆட்சியில் இருந்தபோது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக ஏன் அறிவிக்கவில்லை என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நான்கு நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இன்றைய விவாதத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி காலத்தில் ஏன் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக டெல்டா பகுதிகளை ஏன் அறிவிக்கவில்லை என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விவசாயிகளின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி தான் வேளாண் மண்டலமாக அறிவித்தார் என்று அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் திமுக மற்றும் காங்கிரஸ் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் தான் காவிரி தீர்ப்பில் அரசாணையை பெற முடியும் என்ற சுழலில் திமுக அதனை செய்யவில்லை .காவிரி நடுவர் மன்றத்திற்கு இறுதி தீர்ப்பை பெற்று தந்தது ஜெயலலலிதா என்று கூறினார். இந்த கருத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Categories

Tech |