Categories
தேசிய செய்திகள்

டெபிட் & கிரெடிட் கார்டு புதிய விதிமுறைகள்…… கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. முழுவிவரம் உள்ளே….!!

அக்டோபர் 1 முதல் பணம் பரிமாற்றம் நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கியின் டெபிட் &கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இப்புதிய விதிமுறை மாற்றங்கள் வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டெபாசிட் தொகை வைத்துள்ளோர் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மாற்றங்கள் மற்றும் கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கான  புதிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

 மாற்றி தரப்பட்ட கார்டுகள் உட்பட அனைத்து புதிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் ஏடிஎம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் (PoS)முனையங்களில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

அட்டைதாரர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் கான்டெக்ட்லெஸ்  பரிவர்த்தனைகள் உள்ளிட்ட வேறு எந்த வசதிகளையும் பயன்படுத்த விரும்பினால், சேவைகளை பெற தங்கள் வங்கியை அணுகி பதிவு செய்தால் தான் அனுமதி வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வெளியே கார்டுகளை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வங்கியை அணுகி சர்வதேச பரிவர்த்தனை சேவையை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இப்போது வரை பெரும்பாலான வங்கிகள் வழங்கும் கார்டுகளை உலக அளவில் எங்கும் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

இடர் காரணிகள் அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள கார்டுகளை செயலிழக்க செய்வதற்கும், அவற்றை மீண்டும் வழங்குவதற்கும் வங்கிகளுக்கு உரிமை உண்டு. மேலும் எந்த ஒரு தனிநபரும், இதற்கு முன்னர் ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் கான்டெக்ட்லெஸ் பரிவர்த்தனைகளுக்கு அட்டையை பயன்படுத்த வில்லையோ அவர்களின் அட்டையை முடக்க வங்கிக்கு அதிகாரம் உண்டு.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டு முழுவதையுமோ அல்லது ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் போன்ற குறிப்பிட்ட வசதியை மட்டும் மாற்றி அமைக்கவும், நீக்கவும் வசதி உண்டு. மேலும் வாடிக்கையாளர்கள், தங்கள் பரிவர்த்தனை வரம்புகளை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

 வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை வரம்புகளை  மாற்றியமைக்கக் கூடிய வசதிகளை 24 மணி நேரம்  செயல்படும் மொபைல் செயலிகள்  மற்றும் நெட் பேங்கிங் சேவை மூலம் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்களிலும் இந்த சேவைகள் இருக்க வேண்டும் என குறிப்ப்பிட்டுள்ளது. 

பல வங்கிகள் என்எப்சி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கார்டுகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை ஸ்வைப் செய்யவோ பிஓஎஸ் முனையத்தில் சொருகவோ தேவையில்லை. இவை கான்டெக்ட்லெஸ் பரிவர்த்தனை என்றும்  அழைக்கப்படுகின்றன. 

குறிப்பாக ப்ரீபெய்டு அட்டைகள் மற்றும் வெகுஜன போக்குவரத்து அமைப்புகளில் பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது.

Categories

Tech |