டெடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் . இந்த படத்தில் வரும் டெடி என்ற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா விரைவில் டெடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் அவர் இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஈடுபட்டுள்ளதாகவும், டெடி-2 படத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது நடிகர் ஆர்யா எனிமி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை-3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.