Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் அறிகுறி…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்…!!

டெங்கு காய்ச்சல் அறிகுறியால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலுள்ள சில பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீடுகளில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |