மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டி மேற்கு தெருவில் தியாகராஜன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் டீ வாங்குவதற்காக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்லாடம்பட்டி மேம்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தியாகராஜனின் மொபெட் மீது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த சுதர்சன்(20), அம்பரீஷ்(20) ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.