வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாக பார்த்து துடைக்க வேண்டும். அப்படி நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும் அதிகப்படியான தூசிகள் படிவது டிவியில் மட்டும் தான். எனவே டிவியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் டிவியை சுத்தம் செய்யும்போது சில தவறுகளை செய்கின்றனர். பொதுவாக எல்லோரும் ஈரமான துணியை கொண்டு டிவியை துடைப்பது வழக்கமாக உள்ளது . ஆனால் ஈரமான துணியை கொண்டு துடைக்கும் போது தூசிகள் அப்படியே தொலைக்காட்சி பெட்டியில் படிந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே டிவியில் கோடுகள் விழவும் வாய்ப்பிருக்கும். இதனால் உங்கள் டிவி புதிது போல் ஜொலிப்பதற்கு சில டிப்ஸ்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
வீட்டில் உள்ள கண்ணாடி பொருட்களை துடைக்க எப்பொழுதும் சாதாரண துணியை காட்டிலும் மைக்ரோபைபர் போன்ற துணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனை கொண்டு கண்ணாடியை துடைத்தால் கண்ணாடி பளபளக்கும். மைக்ரோஃபைபர் துணியானது கண்ணாடி திரையில் கோடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. எனவே உங்கள் வீட்டில் டீவியை துடைக்கும்போது மைக்ரோ பைபர் துணியைக் கொண்டு துடைப்பது நல்லது.
எல்சிடி, எல்இடி மற்றும் பிளாஸ்மா திரைகளுக்கு திரவங்களை பயன்படுத்தினால் கடுமையான சேதம் உண்டாகும். குறிப்பாக இந்த திரவத்தில் அமோனியா, ஆல்கஹால், அசிட்டோன் போன்றவை உள்ளது. எனவே இவை டிவி கண்ணாடிகளை சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் டிவி, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கண்ணாடி திரைகளை சுத்தம் செய்ய சிறப்புக் க்ளீனிங்கை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
டிவியை துடைக்க ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். இருப்பினும் இப்படி நேரடியாக செய்வது என்பது மிகவும் ஆபத்தானது. இதனால் நீங்கள் ஸ்பிரேயை துணியில் அடித்து பின்னர் டிவியை துடைத்தால் டிவியின் கண்ணாடிக்கு எந்த சேதமும் ஏற்படாது.
நாம் டிவியை துடைக்கும்போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல்-ஐ சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இதில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே டிவி ரிமோட்டை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான தொலைக்காட்சி பெட்டிகளில் உள்ளமைக்கப்பட்ட இன்பில்ட் ஸ்பீக்கர்கள் காணப்படுகிறது. எனவே நாம் டிவியை சுத்தம் செய்யும்போது ஸ்பீக்கரை சேர்த்து சுத்தம் செய்தால் சத்தம் நன்றாக கேட்கும். ஆனால் ஸ்பீக்கரை ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டாம். அப்படி செய்யும் போது ஸ்பீக்கர் பழுதடைய வாய்ப்புள்ளது.