Categories
மாநில செய்திகள்

டீசல் விலையை குறைக்காவிட்டால்….. இதுதான் நடக்கும்…. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 20 சதவீதம் வாடகை உயரும் என லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தொற்று காரணமாக தொழிற்சாலைகள் சரியாக இயங்காததால் சரக்கு லாரி தொழில் பெரிதளவில் முடக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரழிந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் டோல்கேட் கட்டணம் 25 சதவீதமும், இன்சூரன்ஸ் ரூபாய் 5000 உயர்ந்துள்ளதால் வேறுவழியின்றி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தற்போது மதுரை சென்னை சரக்கு லாரி வாடகை ஒரு டன்னுக்கு 1200 வசூலிக்கிறோம். மதுரையில் உள்ள 300 பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 20 சதவீதம் வாடகையை உயர்த்த உள்ளன. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, சமையல் எண்ணெய், பால் பொருட்கள் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |