கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ59.15 நஷ்டம். டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.