Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்…. அஸ்வினை நீக்கும்போது விராட் கோலியை எதற்காக நீக்கவில்லை….? கபில்தேவ் செம காட்டம்….!!!

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த போட்டியின் 2-வது சுற்றில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆடும் லெவலில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மிகவும் காட்டமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது டி20 போட்டியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படும் போது விராட் கோலியையும் நீக்கலாம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் விராட் கோலி டி 20 மேட்சில் ஆடாமல் இருப்பதே நல்லது. அதன் பிறகு உலக தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் அஸ்வின் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவரை டி20 அணியில் எடுக்கவில்லை. இதனையடுத்து விராட் கோலி ஆடும் பார்மில் இல்லை எனும் போது இளம் வீரர்களை உட்கார வைப்பது முறை கிடையாது. அதன்பிறகு அணியில் உள்ள இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வரவிடாமல் நன்றாக ஆட வேண்டும் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்றே சிலர் கூறுகின்றனர். ஒரு நல்ல வீரர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதற்கு காரணம் அவர் சரியாக விளையாடவில்லை என்பதுதான். மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி எந்த சதத்தையும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |