இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லாதவாறு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது.
அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக படப்பிடிப்புகள், விளையாட்டுக்கள் போன்ற அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடந்த முதல் 2 டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மீதமுள்ள மூன்று டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று குஜராத் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் டி20 போட்டிகளை காண டிக்கெட் வாங்கியவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. புனேவில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.