பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் டி20 உலக கோப்பையை கைப்பற்ற போவது இந்த அணிதான் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்..
டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தற்போது குரூப் 12-ல் இடம்பிடிப்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நாளை முதல் பிரதான சூப்பர் 12 போட்டிகள் நடைபெற உள்ளது இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு நபர்களும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி என்பது குறித்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் (inzamam-ul-haq) இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற போவது இந்த அணிதான் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறியதாவது, எந்த ஒரு தொடராக இருந்தாலும் சரி அந்த தொடரில் இந்த அணிதான் வெற்றிபெறும், கோப்பையை வெல்லும் என்று சொல்வது கடினம்.. ஆனால் எந்த அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று சொல்லமுடியும்.. அதன்படி பார்த்தால் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக (அதிகமாக) இருக்கிறது..
ஏனென்றால் இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது தான் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார்கள்.. அதுமட்டுமில்லை அந்த அணியில் அனுபவமிக்க பல வீரர்கள் இருக்கிறார்கள்.. இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அவர்களால் சிறப்பாக ஆட முடியும்.
மேலும் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது தான் இந்த தொடரில் அவர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது 153 ரன்களை சேஸ் செய்யும்போது விராட் கோலி இல்லாமலேயே இந்திய அணி எளிதாக இலக்கை எட்டியுள்ளது.. இதன் காரணமாக இந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் (24ஆம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.