Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை :ஹர்திக் – வருண் விளையாடுவதில் சிக்கல்….! MENTOR தோனியின் முடிவு என்ன ….?

டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை  பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது . இதில் சுழற்பந்து வீச்சாளர் வருண்  சக்கரவர்த்தி உடற்தகுதி ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது .அதேசமயம் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்துவீச மாட்டார் என்பதால் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என தெரிகிறது .அதேசமயம் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஆல் ரவுண்டர் ஜடேஜா சமீபகாலமாக  பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதோடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய முழுமையாக தயாராகவில்லை. இதனால் இந்திய அணியில் பிசியோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் அவருடைய உடற்தகுதி குறித்து கண்காணித்து முடிவெடுக்கப்படும். தற்போது டி20 உலககோப்பை போட்டிக்கான  இந்திய அணியில் முன்னாள் கேப்டனாக தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பங்களிப்பு அணியில் முக்கியமானதாக கருதப்படுகிறது .அவர் கேப்டன் கோலி, ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோருடன் கலந்தாலோசித்து வருண்  சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறித்த முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.

Categories

Tech |