ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது.. இந்த தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உட்பட பல்வேறு நாடுகள் அறிவித்து விட்டது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் அணியும் நேற்று அறிவித்துள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட உலகக் கோப்பை அணியில், டாப்-ஆர்டர் பேட்டர் ஷான் மசூத் சேர்க்கப்பட்டுள்ளார். முதன்முறையாக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது வாசிம் ஜூனியர் இடம்பெற்றுள்ளார்.. காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
தலைமை தேர்வாளர் முகமது வாசிம் கூறுகையில், டி20 உலகக் கோப்பையில் வலுவாக செயல்படக்கூடிய அணி எங்களிடம் உள்ளது. அதனால்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 ஐ அணியில் இடம் பெற்ற கிட்டத்தட்ட அதே வீரர்கள் மீது நாங்கள் நம்பிக்கையை காட்டியுள்ளோம். நவம்பர் 2021ல் இருந்து இந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் எங்களின் கடைசி 13 டி20 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ளோம். இந்த கிரிக்கெட் வீரர்களுக்காக நாங்கள் முதலீடு செய்துள்ளோம், அவர்கள் உலகக் கோப்பையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவது அவர்களுக்கு நியாயமானது, இந்த தொடருக்காக அவர்கள் தயாராகி, கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர் என்றார்.
மேலும் அவர், இந்த வீரர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும், அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். ஷாஹீன் ஷா அப்ரிடி அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்குவார் என்பது குறித்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் செய்திகள் கிடைத்து வருகின்றன என்றார்.
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள் :
ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி.
Introducing our squad 🙌
🗒️ https://t.co/JnHpDOvXsS#T20WorldCup | #BackTheBoysInGreen pic.twitter.com/BbmTdtBfhk
— Pakistan Cricket (@TheRealPCB) September 15, 2022
Our 18-player squad for the seven-match T20I series against England 👇
🗒️ https://t.co/JnHpDOvXsS#PAKvENG | #BackTheBoysInGreen pic.twitter.com/r6kChdbbDJ
— Pakistan Cricket (@TheRealPCB) September 15, 2022