Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து..!!

இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 47 பந்துகளில் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) 73 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ்  40 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி, சான்ட்னர், இஷ் சொதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 36 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 62 ரன்கள் எடுத்தார். மேலும் கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் சான் கரன் தலா 2 விக்கெட்டுகளும் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Categories

Tech |