Categories
சினிமா

டி.ராஜேந்தரின் கார் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு… டிரைவர் கைது….!!

தமிழ் திரையுலகில் தனது வசனத்தின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் டி.ராஜேந்தர். டிஆர் என்று அழைக்கப்படும் இவர் வசனத்தில் மட்டுமல்லாது நடிப்பு தயாரிப்பு இசை இயக்கம் என பல திறமைகளை கொண்டவர்.  இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடக்கமுடியாத முனுசாமி என்பவர் சாலையை தவழ்ந்து கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டி.ராஜேந்தர் வந்த கார் அவர் மீது மோதியது

இதில் விபத்துக்குள்ளான முனுசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜூவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்  முனுசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்தனர்

Categories

Tech |