அரையிறுதியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குரூப்-1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதனை தொடர்ந்து 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் அரையிறுதி போட்டியில் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது, தினேஷ் கார்த்திக் ஒரு அருமையான வீரர். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனாலும் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் வேகத்தை சமாளிப்பதற்கு அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது அவசியம். அத்தகைய பேட்ஸ்மேன் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைக்க முடியும்..
எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டை தேர்வு செய்ய வேண்டும்.. ஏனென்றால் சமீப காலமாக அவர் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி இருக்கிறார். குறைந்த பவுண்டரி தூரம் கொண்ட அடிலெய்டு மைதானத்தில் நமது அணியின் துருப்புச் சீட்டாக ரிஷப் பண்ட் இருப்பார் என்று தெரிவித்தார்..
முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திகிற்கு பதிலாக பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.. ஆனால் அவர் அந்த போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது..