Categories
மாநில செய்திகள்

டி.என்‌.பி.எஸ்.சி தேர்வு முறை…. நாளை முக்கிய ஆலோசனை…!!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் டிஎன்பிஎஸ்சி வழியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்யப்படும். இதன்படி சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு முறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க நாளை தேர்வாணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

மேலும் பிற மதங்களில் இருந்து மாறுபவர்களுக்கு  பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக முஸ்லிமாக மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஆணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தேர்வாணைய உறுப்பினர் 6 பேர், டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரன் குராலா போன்றோர் பங்கேற்கின்றனர்.

Categories

Tech |