டி.ராஜேந்தர் விரைவில் நலம் பெற்று வர நடிகர் கூல் சுரேஷ் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் வில்லன், நடிகர், நகைச்சுவை நடிகர் என தனக்குள் இருக்கும் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தி நடித்து வருபவர் கூல் சுரேஷ். இவர் தொடர்களிலும் நடித்து வருகின்றார். மேலும் எந்த திரைப்படம் வந்தாலும் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுவிடுவார். இந்த நிலையில் இயக்குனர் டி.ராஜேந்தர் விரைவில் நலம் பெற வேண்டுதல் வைத்து கூல் சுரேஷ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து இருக்கின்றார்.
டி.ராஜேந்தர் சென்ற சில நாட்களுக்கு முன்பாக நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிம்பு தனது அப்பாவிற்கு லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் கூல் சுரேஷ் அவருக்காக நேர்த்திக்கடன் செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.