Categories
உலக செய்திகள்

டிவி பார்த்து மெய் மறந்த நாய்… வைரலாகும் வீடியோ… இணையத்தை கலக்குகிறது ….!!

தொலைக்காட்சியை பார்த்து மெய்மறந்து போன நாயின் சுட்டித்தன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

நம்மில் பலரும் செல்ல பிராணிகளை  அதிக அக்கறையும் பாசமும் கொண்டு வளர்ப்போம். அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அதாவது விளையாட்டு, உணவு உண்ணும் முறை, இவற்றை நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க கற்றுக்கொடுத்து வளர்ப்போம்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதன்மையாக இருப்பது நாய்தான். பல நண்பர்கள் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை விட வீட்டில் அவர்கள் வளர்க்கும் நாயுடன் மிகவும் அன்பாக இருப்பார்கள். மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள் என ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோ பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம்.

முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் ரெக்ஸ் சாப்மேன் சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில், ஒரு நாய் மனிதனை விட ஒரு விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில், “நாங்கள் அனைவரும் விளையாட்டுகளை மிஸ் செய்கிறோம். இதை நாமே சிறப்பாகச் சொல்ல முடியாது” என குறிப்பிட்டுள்ளார். சுமார் 10 வினாடிகளை உடைய அந்த வீடியோவில், ஒரு நாய் கவனமாக டிவி திரையைப் பார்த்து வீரர்களுடன் நகர்வதைக் காட்டுகிறது. அவர் எதிர்பார்ப்பில் சோபாவில் குதித்துக்கொண்டே இருக்கிறார், இறுதியாக, அவர் உற்சாகமாக குதித்து விழுகிறார்.

10 விநாடிகளின் கிளிப் ஒரு நாய் கவனமாக டிவி திரையைப் பார்த்து கொண்டே இருக்கிறது. பின்னர் திரையில் வீரர்கள் நகரும் போது நாயும் நகர்கிறது. பின்னர் அது தொலைக்காட்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியில் பூரித்து பின் இருக்கையில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்து விடுகிறது, இதை பார்த்த நாயின் உரிமையாளர் சிரிக்கிறார். இதேபோன்ற ஒன்று நம்மில் நிறைய பேருக்கு நேர்ந்தது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. இது 382.4k க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று  13.6k க்கும் மேற்பட்ட லைக்குகளைக் கொண்டிருந்தது. இந்த வீடியோவில் சுமார் 3 K மறு ட்வீட் மற்றும் கருத்துகள் கிடைத்துள்ளன. பயனர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |