மும்பையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்த ரேகா நிஷாத் (27) திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த ஜூலை 21ம் தேதி எலிகளை கொல்ல தக்காளியின் மீது எலி விஷம் கலந்து வைத்துள்ளார்.
பின் அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைத்த போது தவறுதலாக விஷம் கலந்து வைத்த தக்காளியை போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார். நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அவர் வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு பிறகு மால்வாணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கூறுகையில் இறப்பில் சதி ஏதும் இல்லை, இது தவறுதலாக நடந்த விபத்து என்று தெரிவித்துள்ளனர்.