Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

டிவி நிகழ்ச்சியில்…. “தொகுப்பாளினிக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட மோதல்”…. வைரலாகும் வீடியோ…!!!!

பிரபல டிவி நிகழ்ச்சியில் நடிகருக்கும் தொகுப்பாளினிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் என்ற திரைப்படத்தில் விஷ்வக்சென் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை விளம்பரம் செய்ய பிராங்க் வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்வதற்காக tv9 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை தேவி நாகவள்ளி பேட்டி எடுத்தார். தேவி விஷ்வக்சென்னிடம் அந்த பிராங்க் வீடியோ பற்றி கேள்வி எழுப்பினார்.

அப்போது விஷ்வக்சென்னை பாகல் சென் என கூறினார். மேலும் விஷ்வக் சென்னின் மனநிலை சரியில்லை என கூறியுள்ளார். இதையடுத்து அவரை ஸ்டூடியோவை விட்டு வெளியே போக சொல்லி தேவி கூறியுள்ளார். அதைக்கேட்ட விஷ்வக் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உங்களின் ஸ்டூடியோவுக்கு வர நான் ஒன்றும் துடிக்கவில்லை. நீங்கள்தான் அழைத்தீர்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து தேவி விஷ்வக் சென்னை திட்டி வெளியே போக சொல்லியுள்ளார்.

இதை பார்த்த பலரும் தேவிதான் சண்டையை தூண்டி விட்டுள்ளார் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விஷ்வக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி விஷ்வக் சென்னை கண்டித்து டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், “டிவியில் நடந்த சண்டைக்கு தேவியும் காரணம் தான். அவரை விட்டுவிட்டு விஷ்வக் சென்னை மட்டும் குறை சொல்லக் கூடாது” என்கிறார்கள்.

Categories

Tech |