சேலம் மாவட்டத்தில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வேன் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலிருந்து கிரிவாசன் என்பவர் சரக்கு வேனில் தனியார் பார்சல் பொருட்களை ஏற்றி விட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கிரிவாசனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது.
இதனால் வேன் நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் ஏறி மேலும் போக்குவரத்து சிக்னல், எச்சரிக்கை பலகை மற்றும் லேசார் மின்விளக்கு கம்பங்கள் ஆகிவற்றை மோதி உடைத்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.