பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார். இருப்பினும் நடிப்பின் மீதுள்ள மிகுந்த ஆர்வத்தினால் சிறுவயதிலிருந்தே நடனம், பாடல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் படிப்பு முடிந்த பிறகு அதிதி தன்னுடைய விருப்பத்தை தந்தையான சங்கரிடம் கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் சங்கரும் சம்மதம் தெரிவிக்கவே, அதிதி சினிமா துறைக்குள் வந்தார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்குப் பிறகு நடிகை அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு சில விளம்பர படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது டிரெடிஷனல் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் ரசிகர்களைக் கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது