ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ காளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிச்சந்திரா என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வேலை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனி ராதா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை இணைத்து உழவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது முனிச்சந்திரா தனது ஒரே மகனை தூக்கிக் கொண்டு அந்த நிலத்திற்கு சென்ற நிலையில் அங்கு குழந்தை அழுந்து கொண்டிருந்தான். அதனைப் பார்த்த மகேஷ் சிறுவனை தூக்கி டிராக்டரில் உட்கார வைத்துக் கொண்டார். சிறுவன் டிராக்டரில் அமர்ந்திருந்ததை மறந்த மகேஷ் வேகமாக ஓட்டினார். அப்போது ஓடும் டிராக்டரில் இருந்து சிறுவன் திடீரென தவறி கீழே சேற்றில் விழுந்தான்.அச்சமயத்தில் சுழலும் ரோட்டோ வேட்டர் கலப்பையில் சிக்கிய குழந்தை மூன்று துண்டுகளாக சிதறி பலியானது.சிறுவன் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.