இந்தியாவில் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் ஐடி கம்பெனி மிகவும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் டிராபிக் ஜாமுக்கும் டெக் நகரம் பிரபலமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் டிராபிக் சிக்கி சின்னாபின்னமாகி வீடு சென்று சேர குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகின்றனர். அதுவும் கார் வைத்திருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம் காரில் உள்ளது. அந்த அளவுக்கு பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே டிராபிக் சிக்கல் இதில் மழையால் வந்து வெள்ளமும் சேர்ந்து வதைப்பதால் மக்கள் கடும் அவதியில் இருக்கிறார்கள். இது குறித்த வீடியோக்களும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனைத்தொடர்ந்து பெங்களூருவின் மோசமான நிலை குறித்து சஹில் என்ற ட்விட்டர் பயனர் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அதன்படி, கூகுள் மேப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து இருக்கிறார். அத்துடன், மஹாதேவப்புராவிலிருந்து பெல்லந்தூர் வரை 8 கிலோ மீட்டர் தொலைவில் நடந்து சென்றால் ஒரு மணி நேரம் 42 நிமிடத்தில் கடந்து விடலாம். ஆனால் அதே தொலைவை காரில் சென்றால் ஒரு மணி நேரம் 41 நிமிடம் ஆகும். அதாவது காரில் செல்வதை விட நடந்து சென்றால் அதிகபட்சமாக ஒரு நிமிடம் தான் கூடுதலாக நேரம் செலவிட வேண்டி இருக்கு என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஒருவர், ‘நடக்குறதுக்கு இருக்கட்டும் நீச்சல் அடிச்சிட்டு போனா எவ்வளவு நேரத்தில் போய் சேரலாம்” என்று கேலியாக பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், ‘காருக்கு பதில் அனைவரும் நடந்தும் சைக்கிளிலும் சென்றால் பெங்களூருவின் முக்கியமான இந்த டிராஃபிக் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்றும் பதிவு செய்து இருக்கிறார்கள்.