Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். இதனை தொடர்ந்து டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அதிபர் டிரம்ப், இருநாட்டு மக்களையும் பாதுகாப்பது குறித்து மோடியுடன் விவாதித்தேன். தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து இருவரும் நீண்ட விவாதம் நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம் என்று கூறியுள்ளர். மேலும் பொருளாதார உறவு குறித்துதான் பிரதானமாக பேசினோம். இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |